இனோக்கா ஹிமாலி இரத்னவீர

அரச சேவையில் பொதுமக்களுக்கு மிகவும் பரீட்சயமான இடம் பிரதேச செயலகமாகும். தமது நாளாந்த பல தேவைகளுக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள அனேகமான மக்கள் பிரதேச செயலகத்;திற்கு வருகை தருகின்றனர். காலி கடவத்சதர பிரதேச செயலாளர் திருமதி. இனோக்கா ஹிமாலி இரத்னவீர அவர்கள் தனது அலுவலகத்துடன் சேவையைப் பெறும் மக்களுக்கு மிகவும் நம்பக்தன்மையுடனும் செயற்திறனுடனும் சேவையை வழங்க இலஞ்சம் மற்றும் ஊழலுக்கான சந்தர்ப்பங்களை குறைத்துக்கொள்வதற்காக நடைமுறையிலுள்ள நவீனத்துடனான இற்றைப்படுத்தப்பட்ட சேவை நிலையமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக நீண்டகாலமாக இடம்பெற்ற இப்பிரதேசத்தின் அரச பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாக்காளர் இடாப்பிற்கு முறையற்ற வகையில் பெயர்களை உள்ளடக்கும் பிரச்சினையை அடையாளம் கண்ட அவர் குறிப்பிட்ட கிராம அலுவவளர் பிரிவுகளுக்கு புதிய கிராம அலுவளர்களை நியமித்து அவர்களுக்க பயிற்சியளித்து மேற்படி நிலையை குறைத்துக் கொள்ளவும், தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார். பல்வேறு அனர்த்தங்களில் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள், மானியங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை செய்தல், தமது கடமைகளை நேர்மையாக மேற்கொள்ளல் போன்ற காரணத்தாலே பல சந்தர்ப்பங்களில் அவர் மீது அரசியல் ஆதிக்கமுடையவர்களது அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மிகவும் தைரியமாக முகம்கொடுத்த அவர் பொதுமக்களது பாராட்டுக்குள்ளானார்.

ஷமிலா அத்தபத்து

கூட்டுறவு துறையென்பது எமது நாட்டு பரிஜைகளுக்கு மிக பரீட்சியமான அரச சேவையொன்றாகும். குறிப்;பாக பொருளாதார வசதியற்;ற பிரஜைகளது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யும் இவ்வாறன நிறுவனங்களது வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்;திறனை பேணுதல் மிகவும் முக்;கியமானதாகும். மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்க பதிவாளருமான திருமதி ஷமிலா அத்தபத்து அவர்கள் இத்துறையில் இடம்பெறக்கூடிய ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைத்துக்கொள்வதற்;கு பல்வேறு வகையான தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தியிருந்தார். அவர் செயற்திறனுடனும் வினைத்திறனுடனும் பொது மக்களுக்கு சேவையை வழங்குவதற்கு தலைமைத்தும் வழங்கி மத்திய மாகாண கூட்டுறவு சங்கங்களை முறையாக ஒழுங்குபடுத்;தி பல்வேறு சேவைகளை மக்;களுக்கு வழங்கியமைக்காக சமூகத்தின் மதிப்பினையும் பாராட்டுக்களையும் பெற்றார். தொடர்சியாக அடிமட்ட அலுவலர்களுடன் நெருக்;கமாக செயற்பட்டு பாரிய ஊழல் நிதி மோசடிகளையும் வெளிச்;சத்திற்கு கொண்டுவர தலைமைத்துவம் வழங்கி, அவ்வாறான சந்தர்பங்களில் மேலெழும் வெளிப்புற அழுத்;தங்களுக்கு தயங்காது தனது கடமையை நிறைவேற்றினார்.

சமிந்த அத்தநாயக்க

இயற்கை காடுகளும் அதில் வாழும் விலங்குகளும் ஒரு நாட்டின் முக்;கிய வளமாகும். குறிப்பாக மனித செயற்பாடுகள் காரணமாக காட்டுவளம் அழிவடைந்து செல்கின்றமை உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள காலகட்டத்தில் நம் நாட்டில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுவரும் வன வாழ் உயிரினங்களை அழிக்கும் முக்கிய இடமான யால வனத்தை பாதுகாப்பதற்கு யால வனத்தின் வன விலங்குகள் கள உதவி அலுவலரான திரு சமிந்த அத்தநாயக்க அவர்கள் தனது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளார். யால காட்டில் இடம் பெறும் யானைத்தந்த கொள்ளையை சட்டத்தின் வலையில் சிக்க வைப்பதாலும் ஏனைய சுற்றிவலைப்புக்களின் போதும் தனது செயற்திறனான ஒத்துழைப்பை வழங்குவதுடன் தன்மீது சுமத்தப்படும் வெளிப்புற மற்றும் உள்ளக சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து செயற்பட்டு வருகின்றார். தொழிலோடு தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு எல்லைகளுக்கு அப்பாற்சென்று காட்டு வளத்திலுள்ள பெறுமதிகள் தொடர்பில் பிரஜைகளை தெளிவூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தி பிரஜைகளை ஒன்றுதிட்டி மரநடுகை வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு Youtube ஏனைய சமூக ஊடகங்களின் வாயிலாகவும் எதிர்கால சந்ததியினரினருக்காக சுற்றாடல் மற்றும் வன வளத்தை பாதுகாப்பதன் முக்கியதுவம் தொடர்பில் கலந்துரையாடல்களை செய்வதிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். பல்வேறு சமூக குழுவினரை பங்குபெறச் செய்து பாதுகாப்பின் உண்மையான பொருளை நாட்டில் நிலைநாட்டுவதே அவரின் எதிர்பார்ப்பாகும்.

சுதத் மஹாசிங்க

நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதான அரச நிறுவனமான பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அலுவலராக கடமையாற்றுவது மிகவும் பொறுப்புடையதும் சவால்மிக்கதுமான செயற்பாடாகும். கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகரான திரு சுதத் மஹாசிங்க அவர்கள் நட்டில் சட்ட ஒழுங்கை பேணுவது தமது கடமை மட்டுமல்ல தனது பொறுப்பென கருதும் முன்மாதிரியான அரச அலுவலராவார். நாட்டில் பிரசித்தமான குற்றவாளிகளை சுற்றிவலைப்தற்காக மேற்கொள்ளப்படும் ஒரு சில முயற்சிகளில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்ட போது அச்சமின்றி அச்சவால்களுக்கு முகம்கொடுத்து கடமையாற்றும் அவர் ஊழல் மற்றும் மோசடி அல்லது தவறிழைக்கும் எந்த நிலை அலுவலருக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்;ள தயங்க மாட்டார். அனைவருக்கும் ஒரு விதமாக சட்டத்ததை அமுல்படுத்தும் போது அரசியல் ஆதிக்கமுடையவர்களினதும் பல்வேறு வெளிப்புற மற்றும் உள்ளக அழுத்தங்களின் போது தயங்காது இலங்கை பொலிஸ் தொடர்பில் பிரஜைகள் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக பணியாற்றியுள்ளார். தனது கடமைகளை நிறைவாக மேற்கொண்டு இடைவிடாது சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் மக்;கள் உட்பட சமூகத்தையும் தெளிவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்று நடத்திவந்தார்.

சாம்பாசிவம் சுதர்சன்

நபரொருவரின் பிறப்பு தொடக்கம் மரணம் வரை தேவையான பல சேவைகளை பிரதேச செயலகம் வழங்குகின்றது. மிகவும் ஆழமாக ஊழல் மோசடி எதிர்ப்பு கொள்கையை பின்பற்றும் யாழ் பிரதேச செயலாளர் திரு. சாம்பாசிவம் சுதர்சன் அவர்கள் தனது அலுவலகத்தின் ஊடாக மக்களுக்கு செயற்திறனான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை செய்துள்ளார். அதீத அர்ப்ணிப்புடனும் நேர்மையுடனும் தனது கடமைகளை நிறைவேற்றும் அவர் முப்பது வருடங்டகளாக எமது நாட்டில் நிலவிய யுத்த நிறைவின் போது யாழ்பாணம் போன்ற பிரதேசமொன்றில் பொதுமக்களது வாழ்நிலையை மீண்டும் கட்டியொழுப்பும் போது மேலெழுந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து மக்களுக்கு மிகவும் நெருக்கமான சேவைகளை வழங்க தமது பணிக்குழுவினரை வழிநடத்தியுள்ளார். தற்போது நிலவும் கொவிட் தொற்று நோய் பரவும் நிலையிலும் அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற உதவிகளை அரசியல் தலையீடுகள் இன்றி நியாயமாக பொதுமக்களுக்கு வழங்கி தனது அலுவலக பணிகளையும் இடைநிறுத்தாது நேர்மையாக தனது அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தி சமூகத்தின் பல்வேறு நிலையுடையவர்களுக்கும் சமனாக ஒரே விதமாக தனது சேவையை வழங்கி பொதுமக்களது நன்மதிப்பை பெற்றுள்ளார். அத்துடன் யாழ் மாவட்டத்தில் அனேகமான சமூக பணிகளையும் சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக அவர் தனது வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளார்.

back to top