Mr. P. Karunarathna Bandara – Divisional Education Director, Thambuttegama Division [WINNER]
பீ.கருணாரத்ன பண்டார, வலயக் கல்வி பணிப்பாளர், தம்புத்தேகம: கல்விச் சேவையில் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய திரு பண்டார கல்வித் திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு முரணாக அரசியல் அதிகாரத்துடன் விடுக்கப்பட்ட கட்டளையை ஏற்க மறுத்து நேர்மையுடன் செயற்பட்டார். இதனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோதும் தனது கொள்கையிலிருந்து அவர் விலகவில்லை. குறித்த அநீதிக்கெதிராக திரு.பண்டார உயர்நீதிமன்றத்தில் வழக்காடி தனக்கு சாதகமான தீர்ப்பையும் பெற்றார். அவர் அதிபராக கடமையாற்றிய காலத்திலும் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார்.