இனோக்கா ஹிமாலி இரத்னவீர

அரச சேவையில் பொதுமக்களுக்கு மிகவும் பரீட்சயமான இடம் பிரதேச செயலகமாகும். தமது நாளாந்த பல தேவைகளுக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள அனேகமான மக்கள் பிரதேச செயலகத்;திற்கு வருகை தருகின்றனர். காலி கடவத்சதர பிரதேச செயலாளர் திருமதி. இனோக்கா ஹிமாலி இரத்னவீர அவர்கள் தனது அலுவலகத்துடன் சேவையைப் பெறும் மக்களுக்கு மிகவும் நம்பக்தன்மையுடனும் செயற்திறனுடனும் சேவையை வழங்க இலஞ்சம் மற்றும் ஊழலுக்கான சந்தர்ப்பங்களை குறைத்துக்கொள்வதற்காக நடைமுறையிலுள்ள நவீனத்துடனான இற்றைப்படுத்தப்பட்ட சேவை நிலையமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக நீண்டகாலமாக இடம்பெற்ற இப்பிரதேசத்தின் அரச பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாக்காளர் இடாப்பிற்கு முறையற்ற வகையில் பெயர்களை உள்ளடக்கும் பிரச்சினையை அடையாளம் கண்ட அவர் குறிப்பிட்ட கிராம அலுவவளர் பிரிவுகளுக்கு புதிய கிராம அலுவளர்களை நியமித்து அவர்களுக்க பயிற்சியளித்து மேற்படி நிலையை குறைத்துக் கொள்ளவும், தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார். பல்வேறு அனர்த்தங்களில் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள், மானியங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை செய்தல், தமது கடமைகளை நேர்மையாக மேற்கொள்ளல் போன்ற காரணத்தாலே பல சந்தர்ப்பங்களில் அவர் மீது அரசியல் ஆதிக்கமுடையவர்களது அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மிகவும் தைரியமாக முகம்கொடுத்த அவர் பொதுமக்களது பாராட்டுக்குள்ளானார்.

ஷமிலா அத்தபத்து

கூட்டுறவு துறையென்பது எமது நாட்டு பரிஜைகளுக்கு மிக பரீட்சியமான அரச சேவையொன்றாகும். குறிப்;பாக பொருளாதார வசதியற்;ற பிரஜைகளது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யும் இவ்வாறன நிறுவனங்களது வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்;திறனை பேணுதல் மிகவும் முக்;கியமானதாகும். மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்க பதிவாளருமான திருமதி ஷமிலா அத்தபத்து அவர்கள் இத்துறையில் இடம்பெறக்கூடிய ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைத்துக்கொள்வதற்;கு பல்வேறு வகையான தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தியிருந்தார். அவர் செயற்திறனுடனும் வினைத்திறனுடனும் பொது மக்களுக்கு சேவையை வழங்குவதற்கு தலைமைத்தும் வழங்கி மத்திய மாகாண கூட்டுறவு சங்கங்களை முறையாக ஒழுங்குபடுத்;தி பல்வேறு சேவைகளை மக்;களுக்கு வழங்கியமைக்காக சமூகத்தின் மதிப்பினையும் பாராட்டுக்களையும் பெற்றார். தொடர்சியாக அடிமட்ட அலுவலர்களுடன் நெருக்;கமாக செயற்பட்டு பாரிய ஊழல் நிதி மோசடிகளையும் வெளிச்;சத்திற்கு கொண்டுவர தலைமைத்துவம் வழங்கி, அவ்வாறான சந்தர்பங்களில் மேலெழும் வெளிப்புற அழுத்;தங்களுக்கு தயங்காது தனது கடமையை நிறைவேற்றினார்.

சமிந்த அத்தநாயக்க

இயற்கை காடுகளும் அதில் வாழும் விலங்குகளும் ஒரு நாட்டின் முக்;கிய வளமாகும். குறிப்பாக மனித செயற்பாடுகள் காரணமாக காட்டுவளம் அழிவடைந்து செல்கின்றமை உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள காலகட்டத்தில் நம் நாட்டில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுவரும் வன வாழ் உயிரினங்களை அழிக்கும் முக்கிய இடமான யால வனத்தை பாதுகாப்பதற்கு யால வனத்தின் வன விலங்குகள் கள உதவி அலுவலரான திரு சமிந்த அத்தநாயக்க அவர்கள் தனது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளார். யால காட்டில் இடம் பெறும் யானைத்தந்த கொள்ளையை சட்டத்தின் வலையில் சிக்க வைப்பதாலும் ஏனைய சுற்றிவலைப்புக்களின் போதும் தனது செயற்திறனான ஒத்துழைப்பை வழங்குவதுடன் தன்மீது சுமத்தப்படும் வெளிப்புற மற்றும் உள்ளக சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து செயற்பட்டு வருகின்றார். தொழிலோடு தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு எல்லைகளுக்கு அப்பாற்சென்று காட்டு வளத்திலுள்ள பெறுமதிகள் தொடர்பில் பிரஜைகளை தெளிவூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தி பிரஜைகளை ஒன்றுதிட்டி மரநடுகை வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு Youtube ஏனைய சமூக ஊடகங்களின் வாயிலாகவும் எதிர்கால சந்ததியினரினருக்காக சுற்றாடல் மற்றும் வன வளத்தை பாதுகாப்பதன் முக்கியதுவம் தொடர்பில் கலந்துரையாடல்களை செய்வதிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். பல்வேறு சமூக குழுவினரை பங்குபெறச் செய்து பாதுகாப்பின் உண்மையான பொருளை நாட்டில் நிலைநாட்டுவதே அவரின் எதிர்பார்ப்பாகும்.

சுதத் மஹாசிங்க

நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதான அரச நிறுவனமான பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அலுவலராக கடமையாற்றுவது மிகவும் பொறுப்புடையதும் சவால்மிக்கதுமான செயற்பாடாகும். கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகரான திரு சுதத் மஹாசிங்க அவர்கள் நட்டில் சட்ட ஒழுங்கை பேணுவது தமது கடமை மட்டுமல்ல தனது பொறுப்பென கருதும் முன்மாதிரியான அரச அலுவலராவார். நாட்டில் பிரசித்தமான குற்றவாளிகளை சுற்றிவலைப்தற்காக மேற்கொள்ளப்படும் ஒரு சில முயற்சிகளில் உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்ட போது அச்சமின்றி அச்சவால்களுக்கு முகம்கொடுத்து கடமையாற்றும் அவர் ஊழல் மற்றும் மோசடி அல்லது தவறிழைக்கும் எந்த நிலை அலுவலருக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்;ள தயங்க மாட்டார். அனைவருக்கும் ஒரு விதமாக சட்டத்ததை அமுல்படுத்தும் போது அரசியல் ஆதிக்கமுடையவர்களினதும் பல்வேறு வெளிப்புற மற்றும் உள்ளக அழுத்தங்களின் போது தயங்காது இலங்கை பொலிஸ் தொடர்பில் பிரஜைகள் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக பணியாற்றியுள்ளார். தனது கடமைகளை நிறைவாக மேற்கொண்டு இடைவிடாது சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் மக்;கள் உட்பட சமூகத்தையும் தெளிவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்று நடத்திவந்தார்.

சாம்பாசிவம் சுதர்சன்

நபரொருவரின் பிறப்பு தொடக்கம் மரணம் வரை தேவையான பல சேவைகளை பிரதேச செயலகம் வழங்குகின்றது. மிகவும் ஆழமாக ஊழல் மோசடி எதிர்ப்பு கொள்கையை பின்பற்றும் யாழ் பிரதேச செயலாளர் திரு. சாம்பாசிவம் சுதர்சன் அவர்கள் தனது அலுவலகத்தின் ஊடாக மக்களுக்கு செயற்திறனான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை செய்துள்ளார். அதீத அர்ப்ணிப்புடனும் நேர்மையுடனும் தனது கடமைகளை நிறைவேற்றும் அவர் முப்பது வருடங்டகளாக எமது நாட்டில் நிலவிய யுத்த நிறைவின் போது யாழ்பாணம் போன்ற பிரதேசமொன்றில் பொதுமக்களது வாழ்நிலையை மீண்டும் கட்டியொழுப்பும் போது மேலெழுந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து மக்களுக்கு மிகவும் நெருக்கமான சேவைகளை வழங்க தமது பணிக்குழுவினரை வழிநடத்தியுள்ளார். தற்போது நிலவும் கொவிட் தொற்று நோய் பரவும் நிலையிலும் அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற உதவிகளை அரசியல் தலையீடுகள் இன்றி நியாயமாக பொதுமக்களுக்கு வழங்கி தனது அலுவலக பணிகளையும் இடைநிறுத்தாது நேர்மையாக தனது அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தி சமூகத்தின் பல்வேறு நிலையுடையவர்களுக்கும் சமனாக ஒரே விதமாக தனது சேவையை வழங்கி பொதுமக்களது நன்மதிப்பை பெற்றுள்ளார். அத்துடன் யாழ் மாவட்டத்தில் அனேகமான சமூக பணிகளையும் சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக அவர் தனது வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளார்.

இன்டர்கிரிட்டி ஐக்கன்  2020

நேர்மைத்திறன் விருது என்பது நேர்மையான அரசாங்க உத்தியோகத்தர்களைத் தேடி பிரஜைகளினால் நடத்தப்படுகின்ற உலகளாவிய பிரச்சாரமாகும். நேர்மை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தினை எடுத்து விளக்குவதற்கான நேர்மைத்திறன் எனும் எண்ணக்கருவினைப் பற்றிய கலந்துரையாடலினை இது உருவாக்க நாடுகின்றது. புதிய தலைமுறையினர் மிகவும் செயற்திறன்மிகு அரச ஊழியர்களாக ஆகுவதற்கு இது ஊக்குவிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான கட்டமாக தேசிய ஊடகங்கள் மூலம் நேர்மைத்திறன் பற்றிய தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு பிரஜைகளுக்கு இந்த விருதுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நியமன காலத்தில் தொண்டர்களின் அணியொன்று நாடு முழுவதும்; பயணம் செய்து நியமனங்களை உறுதிப்படுத்துவதில் உதவி செய்கிறது. நியமிக்கப்படுபவர்களின் 30 பேர்களைக்கொண்ட இறுதி பட்டியல் சுயாதீனமான நடுவர் குழாம் ஒன்றினால் இறுதி ஐந்து பேரைக்கொண்ட இறுதி பட்டியலாகச் சுருக்கப்படுகின்றது.

இறுதியான பட்டியலில் இடம்பெறுவோரின் வரலாறு அதாவது அவர்களது பின்புலம், அவர்கள் என்ன செய்துள்ளனர், அவர்கள் எதிர்கொண்ட தடைகள், அவர்களின் பணியின் தாக்கம் மற்றும் அவர்களது கனவுகள் ஆகியவை காணொளியாக்கப்பட்டு தேசிய டிஜிட்டல் ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டு இணையத்தளத்திலும் சமூக ஊடகத்திலும் வெளியிடப்படும். இது இணையத்திலும் இணையம் அல்லாத தளங்களிலும்; தேசிய கலந்துரையாடலினை உருவாக்குகின்றது. குறுஞ்செய்திச் சுருக்கக் குறியீடுகளின் மூலமாகவும் இணையத்தளத்தின் மூலமாகவும் பிரஜைகள் அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாம்.

நடுவர் குழாம்

தர்மசிறி நாணயக்கார

முன்னாள் பிரதி ஆணையாளர் உள்;ளூராட்சி திணைக்களம் - மேல் மாகாணம்

எம்.எம்.முஹம்மட்

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் - தேர்தல்கள் ஆணைக்குழு

எம்.டி.ஏ. ஹெரல்ட்

ஓய்வு பெற்ற பிரதி கணக்காளர் நாயகம் மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் முன்னாள் தவிசாளர்.

ஹேமந்தி குணசேக்கர

இலங்கை உள்ளூராட்சி அதிகாரசபைகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் local Government Initiative Network ன் பணிப்பாளருமாவார்.

எம்.எஸ்.தேவகௌரி

சுதந்திர ஊடகவியலாளர், விரிவுரையாளர் மற்றும் ஊடகப் பயிற்றுவிப்பாளர்

செயன்முறை

ஜூன்

நடுவர் குழாமினை நியமித்தல்

ஜூன் – ஆகஸ்ட்

நேர்மைத்திறன் விருது நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்தல்
அச்சு, இலத்திரனியல் மற்றும் ஒன்லைன் ஊடகம் மூலமாக வேட்புமனுக்களைக் கோருதல்
வேட்பு மனுக்களைத் தரம் பிரித்து, பொருத்தமற்ற நியமனங்களைப் புறக்கணித்தல்

ஜூன் – ஆகஸ்ட்

தொண்டர்களினால் மிகவும் பரந்தளவில் பின்புலங்கள் பரிசீலிக்கப்பட்டு, வழங்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையினைப் பரிசீலித்தல்

செப்டம்பர்

நடுவர் குழாமினால் பரீட்சிக்கப்பட்ட நியமனங்களை மதிப்பிட்டு இறுதி 5 வேட்பாளர்களினைத் தெரிவு செய்தல்

அக்டோபர் – நவம்பர்

இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்களை பற்றிய காணொளிகளை தயாரித்தலும் வெளியிடுதலும்.

நவம்பர் – டிசம்பர்

பகிரங்க வாக்கெடுப்பு

டிசம்பர்

விருது வழங்கும் வைபவம்

தகைமை

தகைமை

அரசாங்க ஊழியர்கள் பொதுமக்களுடனான அவர்களது ஈடுபாட்டின் போது நேர்மைத்திறனினை வெளிக்காட்டுபவர்களாக இருக்க வேண்டுமென்பதுடன் அவர்கள் தமது சேவைகளை வழங்குவதில் தமது சக்திக்கு அப்பாற்பட்டு செயற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதுவே போட்டிக்கான தகைமைகள் ஆகும். போட்டியில் பங்குபற்றுபவர்களது நடத்தை உன்னதமான பண்புகளைக் கொண்டவதாகவூம் மெச்சத்தக்கதாகவூம் இருக்க வேண்டுமென்பதுடன் இவர்களின் நடத்தையானது மற்றவர்களையூம் கவரக்கூடியதாகவூம் தூண்டக்கூடியதாகவூம் இருக்க வேண்டும். உள்ளுhர் மட்ட அதிகாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஓய்வூ பெற்ற உத்தியோத்தர்கள் தகைமையூடையவர்களாக ஆக மாட்டார்கள்.

விண்ணப்பதாரிஇ
• இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
• அரசாங்கத்திலோஇ முகவர் நிறுவனத்திலோ அல்லது திணைக்களமொன்றிலோ ஓய்வூ பெறுவதற்கு ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட காலத்தை உடையவராக இருக்க வேண்டும்.
• நேர்மைத்திறன் விருதுக்காக விண்ணப்பிக்கப்படும் சந்தர்ப்பத்திலே அரசாங்கப் பதவியில் குறைந்தது 5 வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்.
• அரசாங்க உத்தியோகத்தராக ஃ சிவில் சேவை உத்தியோகத்தராக தனது கடமை களையூம் பொறுப்புக்களையூம் நேர்மையூடன் நிறைவேற்றியவராக இருக்க வேண்டும்.
• குற்றச்செயல்கள்இ ஊழல் மற்றும் எவ்வகையிலுமான அதிகார துஸ்பிரயோகம் ஆகியவை தொடர்பாக குற்றம் சாட்டப்படாதவராகவூம் எந்தவொரு ஒழுங்குபடுத்தல்; அமைப்பினாலும் பதவியிலிருந்து நீக்கப்படாதவராகவூம் இருக்க வேண்டும்.
• பிரச்சாரம் மற்றும் பகிரங்க வாக்கெடுப்புச் செயன்முறையில் பங்குபற்றத் தயாரானவராக இருக்க வேண்டுமென்பதுடன் நீதிபதிகள் குழாம் மற்றும் பொதுமக்களின் தீர்மானத்திற்கு இயைபுறுபவராக இருக்கவேண்டும்.
• உள்ளுhர் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்படுவதற்காக புகைப்படம் எடுப்பதற்கும் காணொளி; எடுப்பதற்கும் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.

தெரிவடிப்படை

நியமனமானது பின்வரும் தெரிவடிப்படைகள்; ப+ர்த்தி செய்யப்படுவதை வெளிப்படுத்த வேண்டும்.

• பொறுப்பேற்கப்பட்டுள்ள முன்னெடுப்புக்களின் தாக்கத்தின் முக்கியத்துவம்
• பின்வருவனவற்றிற்கு நீட்சி அடைகின்ற தனிப்பட்ட மட்டத்திற்கு அப்பால் எடுக்கக்கூடிய இந்த முயற்சி ஃ செயற்பாடு ஏற்;படுத்தக்கூடிய தாக்கத்தின் அளவூ

– நிறுவனம்
–  உள்ளுhர் மட்டம்
– தேசிய மட்டம்
– சர்வதேசப் மட்டம்

• இவ்வாறான தகைமைகளை கொண்டிருப்பவரினால் உறுதியானதும் கடினமானதும் என அவர் நினைக்கக்கூடிய உறுதியான சவால்களை அவர் எந்தளவிற்கு வெற்றி கொண்டுள்ளார்.
• சாதகமான பெறுபேற்றினை அடைவதற்கு மேற்கொண்ட தனிப்பட்டஇ பொருளாதாரஇ பௌதீகஇ சமூகஇ தொழில் ரீதியான அல்லது நிறுவன ரீதியான தியாகங்களின் அளவூ
• அரசாங்க சேவையில் முன்னெடுப்புகளை ஒரு ஒப்பீட்டு நியமக்குறியாகப் பயன்படுத்துவ தற்கான ஆற்றல்.
• பொறுப்பேற்கப்பட்டுள்ள முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதற்காக பதவி வழங்கியூள்ள வாய்ப்பினை அவர் ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்ற மட்டம்.
• நியமிக்கப்படுபவர் நேர்மைத் திறனுக்காகவே நியமிக்கப்படுகின்றார் என்பதில் தௌpவாக இருக்க வேண்டும். உதாரணமாக சமுதாயத்தில் வெறுமனே தனது பணியை ஆற்றுவதற்காக அல்ல.

விண்ணப்ப படிவம்

Download Application [English/Sinhala/Tamil]

සිංහල

 

DOWNLOAD PDF

ENGLISH

 

DOWNLOAD PDF

தமிழ்

 

DOWNLOAD PDF

தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இலங்கையில் அரசாங்க உத்தியோகத்தர்கள்

இலங்கை நாட்டினை சேர்ந்த ஏதேனுமொரு அரசாங்க ஊழியராக இருக்கலாம். ஆனால் அதிகாரசபைஇஅரச திணைக்கள சபைஇஅரச கூட்டுத்தாபனங்களை அல்லது பாதுகாப்பு சேவை மையத்தை சேர்ந்த ஒரு நிரந்தர ஊழியராக இருக்க முடியாது.

நேர்மைத்திறன் என்பது என்ன?

நேர்மைத்திறன் என்பது அடிப்படையில் ஊழலின்மையை விளக்கப்படுத்துகின்றது. அதனை விரிவாக விளக்கும் போது தனது கடமையை தவிர்த்து மேலதிகமான சேவைகளை மக்களுக்கு வழங்குபவராகவூம் அதே சமயம் நேர்மையாகவூம் வலுவான கோட்பாடுகளை கடைபிடிப்பவராகவூம் உள்ள ஒரு நபரை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு விடயம் ஆகும்.

நியமனங்கள்

யாரும் ஒரு வேட்பாளராக நியமிக்கப்படலாம் (மாதிரி நியமனப் படிவத்திற்கு பின்னிணைப்பு யூ யினைப் பார்க்கவூம்). நியமனப்படிவம் பின்வரும் ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்படலாம்.

• இணையத்தளம் www.integrityicon.lk
• மின்னஞ்சல் icon@tisrilanka.org
• கையினால் எழுதப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட பத்திரங்களை 5/1 எலிபேங்க் வீதிஇ கொழும்பு 05 இலுள்ள நிறுவனத்தில் நேரடியாகக் கையளிக்கலாம். அல்லது இந்த முகவரிக்குத் தபாலில் அனுப்பலாம்.

நியமன விண்ணப்பப்படிவம் தொடர்பாகவூம் செயன்முறை தொடர்பாகவூம் தௌpவூபடுத்தல்கள் தேவைப்படின் தயவூசெய்து எமது தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்ளவூம். 0711295295

SHORT APPLICATION FORM

If you want to nominate person, Please send basic information first by filling our short application form. Please click below button for application form.

location-icon

ADDRESS

Transparency International Sri Lanka,

5/1, Elibank Road,

Colombo 05,

Sri Lanka

Time: 8:30 AM to 5:00 PM [Monday to Friday]

email-icon

CONTACT

idol@tisrilanka.org

0711 295 295   -or –   076 117 33 44

back to top